இந்தியாவின் சிறந்த நகரம் பெங்களூரு! -மெர்சர்

செவ்வாய், 4 டிசம்பர் 2012 (19:59 IST)
தொழில்நுட்பங்களின் குவியலாக இருக்கக் கூடிய பெங்களூரு நகரம் தான் இந்தியாவில் வாழ்வதற்கான சிறந்த நகரம் என்று உலக அளவிலான மனிதவள நிறுவனம் மெர்சர் தெரிவித்துள்ளது.

மெர்சர் நிறுவனத்தின் 2012-ம் ஆண்டுக்கான உலகின் தரமான வாழ்விடங்களின் பட்டியலிலஇந்தியாவில் உள்ள பிற நகரங்களோடு ஒப்பிடும் போது பெங்களூரநகரமமுதல் இடத்தைப் பிடித்துள்ளது.

உலகத்தர வரிசையிலபெங்களூரு 139-வது இடத்திலும், டெல்லி 143-வது இடத்திலும், மும்பை 146-வது இடத்திலும், சென்னை 150-வது இடத்திலும், கொல்கத்தா 151-வது இடத்திலும் உள்ளது.

உலகத்தரம் வாய்ந்த பள்ளிகளின் காரணமாக பெங்களூரு நகரத்திற்கு கூடுதல் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்