இணையதளங்களுக்கு தணிக்கை இல்லை

வெள்ளி, 16 டிசம்பர் 2011 (09:23 IST)
இணையதளங்களதணிக்கசெய்வதஎன்கிகேள்விக்கஇடமில்லஎன்றமத்திதொலைத்தொடர்பஅமைச்சரகபிலசிபல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இணைய தளங்களில் நடைபெறும் குற்றங்களை தடுப்பது பற்றிய ஆலோசனை கூட்ட‌த்‌தி‌ல் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் போன்ற இணைய தள நிறுவங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்து‌க்கு ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய மத்திய தொலை தொடர்புத்துறை அமை‌ச்ச‌ர் கபில் சிபல், இணைய தள குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க தேவையான சட்டங்கள் தற்போது அமலில் இருக்கிறது. எனவே புதிய சட்டம் கொண்டு வர தேவை இல்லை என்றார்.

இந்திய மக்களுக்கு பேச்சுரிமை போல எண்ணத்தை வெளிப்படுத்தும் உரிமையும் இருக்கிறது எ‌ன்று‌ கூ‌றிய க‌பி‌ல் ‌சிப‌ல், அதன்படி இணையதளங்களில் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதை தடை செய்ய முடியாது எ‌ன்று‌ம் இதற்காக இணைய தளத்தில் சென்சார் கொண்டு வரும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று‌ம் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்