அஸ்ஸாமில் கடும் நிலநடுக்கம்

திங்கள், 21 செப்டம்பர் 2009 (15:10 IST)
அஸ்ஸாமில் இன்று பிற்பகல் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆகப் பதிவானதாக ஷில்லாங் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அஸ்ஸாமில் உள்ள இந்திய-மியான்மர் எல்லையில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், இன்று மதியம் 2.23 மணியளவில் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஸ்ஸாம் தலைநகர் கவுஹாத்திக்கு வடமேற்கே 125 கி.மீ தொலையில், பூமிக்கடியில் 7.2 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்