அரவிந்த் கெஜ்ரிவால் சுங்க வரி கட்ட தவறியதாக குற்றச்சாட்டு

வியாழன், 13 மார்ச் 2014 (11:20 IST)
குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சுங்க வரி கட்ட தவறியதாக குஜராத் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனிடையில் மும்பையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கெஜ்ரிவால் நாட்டில் எங்குமே மோடி அலை இல்லை என பேசியுள்ளா
FILE

பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநிலத்தின் முதலமைச்சருமான நரேந்திர மோடி தெரிவித்ததை போல குஜராத்தில் முன்னேற்ற பணிகள் நடந்துள்ளனவா என்பதை பார்க்க அங்கு சென்றதாக சொன்ன ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 3 இடங்களில் சுங்க வரி கட்ட தவறியதாக குஜராத் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து குஜராத்தின் நிதித்துறை அமைச்சர் நிதின் பட்டேல் தெரிவிக்கையில், குஜராத்திற்கு வந்த அரவிந்த் கெஜ்ரிவாலும் அவருடன் வந்தவர்களும் சுங்கவரி கட்டாமல் சென்றுள்ளனர். வராகி, சூரஜ்பாரி மற்றும் சமக்கியாலி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் வரி செலுத்த கெஜ்ரிவால் தவறிவிட்டார். சுங்கச்சாவடி ஊழியர்கள் வாகனங்களை நிறுத்தியும், அவர்கள் நிறுத்தாமல் சென்றுள்ளனர் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், மும்பையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த ஆண்டு முதலே நாட்டில் மோடி அலை வீசுவதாக கூறப்படுகிறது. நான் ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்திற்கு சென்றேன். இப்போது மும்பைக்கு வந்திருக்கிறேன். நாட்டில் எங்கேயும் மோடி அலை வீசுவதாக எனக்கு தெரியவில்லை.

நாட்டில் கோப மற்றும் அதிருப்தி அலை தான் வீசுகிறது. மக்கள் நேர்மையான அரசியலை கொண்டு வர முடிவு செய்துவிட்டார்கள். இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் அதிசயம் நடக்கும் என அவர் பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்