அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக்கு பாரதிய ஜனதா எதிர்ப்பு

திங்கள், 18 ஜூன் 2012 (17:43 IST)
ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி மீது லஞ்ச ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கூறியுள்ளதற்கு பாரதிய ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அன்னா ஹசாரே குழுவினர் தங்களைச் சுதந்திரமான, சிறந்த அரசியல் நிர்ணய சபையாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என்று பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி இன்று கூறினார்.

தேர்தலுக்கு முன் பிரணாப் முகர்ஜி மீது ஒரு தனியார் சமூக அமைப்பு விசாரணை குழு அமைக்கக் கோருவதை ஏற்க முடியாது. மேலும் இதுபோன்ற அறிக்கைகள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்