அசாம் தலைமைச் செயலகத்தில் தீ விபத்து

வியாழன், 16 பிப்ரவரி 2012 (16:01 IST)
அசாம் தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

அசாம் மாநிலத்தில் திஸ்பூர் பகுதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தலைமைச் செயலகத்தின் மூன்றாவது மாடியில் உள்ள நீர்வளத்துறையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பல கோப்புகள் எரிந்து நாசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து தடயவியல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்