மணிப்பூர் ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு

வெள்ளி, 18 செப்டம்பர் 2009 (17:30 IST)
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் சக்தி வாய்ந்த குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக அரசு வட்டாரங்கள் கூறின.

இன்று காலை அந்த கார் நிறுத்தப்பட்டதாகவும், அதில் உள்ள பதிவு எண் உண்மையானதா அல்லது போலியானதா? என்பது கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் மாளிகைக்குள் அந்தக் கார் எப்படி வந்தது? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் கூறினர்.

பங்கேய் பயிற்சி மையத்திற்கு அந்தக் காரை தள்ளிச் சென்ற காவல்துறையினர், காரில் இணைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்ததாகவும் அரசு வட்டாரங்கள் கூறின.

வெடிகுண்டுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்