தெலங்கானா: அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்க ஆந்திர முதல்வர் மறுப்பு

வியாழன், 24 டிசம்பர் 2009 (19:58 IST)
தெலங்கானா பகுதியைச் சேர்ந்த ஆந்திர அமைச்சர்கள், இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்த நிலையில், அதனை ஏற்க ஆந்திர முதலமைச்சர் ரோசய்யா மறுத்துவிட்டார்.

தனி தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கான முடிவை நிறுத்திவைப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலம் தெலங்கானாப் பகுதிகளில் இன்று மீண்டும் போராட்டம் வெடித்தது.

அத்துடன் தெலங்கானா பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தெலங்கானா மக்களின் கோபத்திற்குள்ளாகிவிடக்கூடாது என்ற அச்சத்தில், அப்பகுதியைச் சேர்ந்த சில ஆந்திர மாநில அமைச்சர்கள் இன்று முதலமைச்சர் ரோசய்யாவை சந்தித்து, தங்களது ராஜினாமா கடிதங்களை அளிக்க முயன்றனர்.

ஆனால் அதனை ஏற்க ரோசய்யா மறுத்துவிட்டார். ராஜினாமா முடிவு எதையும் எடுக்க வேண்டாம் என அவர்களை கேட்டுக்கொண்ட முதல்வர், பொறுப்புடன் நடந்துகொண்டு மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த உதவுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்