"பொன்னியின் செல்வன் 2" வெற்றியா? தோல்வியா? ட்விட்டர் விமர்சனம்!

வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (11:10 IST)
தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முன்னணியில் இடம்பெற்ற பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை இன்று இரண்டாம் பாகம் வெளியாகிறது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இன்று வெளியாகியுள்ள 2ம் பாகம் படத்தை பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்? படம் வெற்றியா? தோல்வியா? என்பதை இந்த ட்விட்டர் விமர்சனத்தின் மூலம் கணிக்கலாம். 
 
பொன்னியின் செல்வன் 2பாகுபலியை மிஞ்சும் பிரம்மாண்டம்: மணி சாரின் மாஸ்டர் பீஸ்: ரசிகர்கள் கொண்டாட்டம்
 
கோமாளி படங்கள் என்றாலே சிட்டி யை தாண்டி பெருசா வரவேற்பு இருக்காது. 
கோமாளிகள் சம்பந்தப்பட்ட படத்துக்கும் அதே கதிதான்.  PS1 க்கு  இருந்த வரவேற்பில் பாதிகூட இல்லை. முதல் காரணம் ' R' factor. 2வது PS1 பாடல்கள் வேற ரகம். 3 வது முக்கிய காரணம்  K factor என எதிர்மறையான விம்சர்சனம் கொடுத்துள்ளனர். 


 
பொன்னியின் செல்வன் படம் சிறப்பாக கையாளும் ஒரு சரித்திரப் படம். இசை திரைப்படத்துடன் கலந்த உணர்வையும், உணர்ச்சியையும் உயர்த்துகிறது. அனைவரின் சிறப்பான நடிப்பு. ஒரே குறை, பழைய மணிரத்னம் திரைப்படத்தை காணவில்லை.
 
பொன்னியின் செல்வன் ப்ரில்லியன்ட். கதை எழுதியது முழுவதும் அருமை.
 
இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, த்ரிஷா, ஷோபிதா துலிபாலா,  சரத்குமார், விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி,  லால், ஜெயசித்ரா,நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்