சென்னையில் ஒரு நாள்

புதன், 3 ஏப்ரல் 2013 (14:26 IST)
சென்னையில் ஒரு நாள் இரண்டு விஷயங்களுக்காக முக்கியமானது. முதலாவது அது சொல்லும் சமூக செய்தி.

மூளைச்சாவு அடைந்த ஒருவர் பௌதிகமாக மரணத்தை தழுவும் முன்பு அவரது இதயத்தை எடுத்து வேறொருவருக்கு பொருத்தலாம். மூளைச்சாவு அடைந்தவ‌ரின் குடும்பத்தினரால் எளிதில் ஒத்துக் கொள்ள முடியாத இந்த நிகழ்வை அவர்களின் எல்லா மறுப்புகளோடு, அவர்களை கன்வின்ஸ் செய்வதை நேர்மையாக இப்படம் காட்சிப்படுத்தியிருக்கிறது. ஹிதேந்திரன் வழியாக தெ‌ரிய வந்த உறுப்பு தானத்தை இன்னும் அழுத்தமாக இப்படம் மக்களிடையே கொண்டு சேர்க்கிறது.
FILE

இரண்டாவது இதன் திரைக்கதை. சென்னையிலிருந்து ஒன்றரை மணி நேரத்தில் மூளைச்சாவு அடைந்தவ‌ரின் இதயத்தை கொண்டு போய் வேலூரில் சேர்க்க வேண்டும். விறுவிறுப்பான த்‌ரில்லராக மாறக்கூடிய இந்த ஒன் லைனை, படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் பின்புலத்தை, பிரச்சனைகளை சொல்வதன் வழியாக உணர்வுபூர்வமாக மாற்றியுள்ளது முக்கியமானது. இதுதான் ஒரு திரைக்கதையை செழுமைப்படுத்துவதன் அடையாளம்.

விபத்தில் மூளைச்சாவு அடைந்த மகனின் பெற்றோர்களாக ஜெய்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணன். மகன் இறப்பதற்கு முன்பே செயற்கையாக மரணத்தை உருவாக்க வேண்டும் என்பதை கேட்டு துடிப்பதும், மகனின் காதலியை தங்களின் வாழ்க்கைக்குள் அனுமதிப்பதும் நெகிழ்ச்சியான தருணங்கள்.

ஏற்கனவே ஏற்பட்ட அவமானத்தை களைய சென்னை டூ வேலூர் இதயத்தை எடுத்துச் செல்ல முன்வரும் போலீஸ்காரராக சேரன். சோகமான பின்னணியை சேரனின் முகபாவம் கடும் சோகமாக மாற்றி சென்டிமெண்ட் ஏ‌ரியாவுக்குள் கொண்டு செல்கிறது. பிரசன்னா கனகச்சிதம்.

போலீஸ் கமிஷனராக வரும் சரத்குமார், பிரபல நடிகராக வரும் பிரகாஷ்ரா‌ஜ், அவரது மனைவி ராதிகா என அனைவரும் பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள். பிரகாஷ்ரா‌ஜ் ஒருபடி மேலே.
FILE

கதை, திரைக்கதை மற்றும் காட்சிகளால் தனித்து நிற்கக் கூடிய படத்தில் பிரபல நடிகரை திணத்து சினிமாத்தனம் ஆக்கியதை தவிர்த்திருக்கலாம். இனி வருவது இந்தப் படத்தையும், இதன் ஒ‌ரி‌ஜினல் ட்ராஃபிக்கையும் பார்த்தவர்களுக்கு மட்டும்.

வடக்கு நோக்கு எந்திரம் (திண்டுக்கல் சாரதி), சிந்தா நிஷ்டயாய சியாமளா (சிதம்பரத்தில் ஓர் அப்பாசாமி) படங்களை தமிழில் மோசமான முறையில் ‌‌ீமேக் செய்த விபத்து ட்ரஃபிக் படத்துக்கு நேரவில்லை என்பது ஆறுதல். சீனவாசன் ஷட்டிலாக செய்த குற்றவுணர்வு கொண்ட கதாபாத்திரத்தை சேரனின் சோகம் ஈடுசெய்யவில்லை என்பதை தவிர்த்து பெ‌ரிதாக குறைகளில்லை என்பதுடன் காட்சிகளின் தெ‌ளிவு மலையாளத்தைவிட இதில் பொலிவு பெற்றிருப்பதாகவே தெ‌ரிகிறது. பாடல் காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம்.

தயா‌ரித்த ராதிகாவும், இயக்கிய ாகித் காதரும் பாராட்டுக்கு‌ரியவர்கள். கண்டிப்பாக ஒருமுறை பார்க்க வேண்டிய படம்.

வெப்துனியாவைப் படிக்கவும்