வரதட்சணை கேட்டு மனைவியை கிணற்றில் தள்ளிய கணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (16:00 IST)
மத்திய பிரதேசத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கிணற்றில் தள்ளி அதை வீடியோவாக எடுத்துள்ள நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
 
 மத்திய பிரதேச மாநிலத்தில் மாநிலத்தில் நீமூச் என்ற மாவட்டத்தில் 5 லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு மனைவியை கயிற்றால் கட்டி கிணற்றில் தள்ளி உள்ளார் ராக்கேஷ் என்ற கொடூர கணவர். மேலும் இதனை அவர் வீடியோவும் எடுத்து வைத்துள்ளார். 
 
இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையில் தற்போது தான் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து பெண்ணின் தந்தை போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவர் ராக்கேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
 மேலும் அவரது மொபைலை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட வீடியோவை இந்த வழக்கின் சாட்சியாக போலீசார் சேர்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்