காலையில் ஏற்றம், மாலையில் சரிவு.. ஆட்டம் காட்டும் பங்குச்சந்தை..!

வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (10:00 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக காலையில் ஏற்றத்துடன் தொடங்கினாலும் அதன் பின் சில மணி நேரங்களில் மீண்டும் பங்குச்சந்தை சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இன்றும் காலையில் பங்குச்சந்தை 100 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று மதியத்திற்கு மேல் சரியுமா அல்லது தொடர்ந்து ஏற்றத்தில் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மும்பை பங்குச்சந்தை சில மணி நேரங்களுக்கு முன் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்து 59 ஆயிரத்து 700 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 25 புள்ளிகள் உயர்ந்து 17,536 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னால் சென்செக்ஸ் 63 ஆயிரத்து தாண்டி இருந்த நிலையில் தற்போது 60,000 குறைவாக வர்த்தகம் ஆகி வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்