ஒரே ஒரு நாள் தான் ஏற்றம்.. மீண்டும் சரிய தொடங்கிய சென்செக்ஸ்..!

புதன், 15 பிப்ரவரி 2023 (09:44 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிவில் இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 600 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்தது என்பதும் சென்செக்ஸ் 61000 புள்ளிகளை தாண்டியதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை அடைந்தனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் நேற்று ஒரே ஒரு நாள் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சற்றுமுன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 270 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 758 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிட்பி 70 புள்ளிகள் சரிந்து 17860 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில நாட்களுக்கு பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்