இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்றுமுன் சென்செக்ஸ் 815 புள்ளிகள் உயர்ந்து 79 ஆயிரத்து 700 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதே போல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 240 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 360 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை இன்னும் சில நாட்கள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்பதால் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்தை கேட்டு முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. இன்று மிக சில பங்குகள் மட்டும் தான் குறைந்துள்ளது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து பங்குகளும் உயர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.