இரண்டாவது நாளாக தங்கம் விலை உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு உள்ளதா?

செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (10:23 IST)
தங்கம் வெள்ளி விலை நேற்று சென்னையில் உயர்ந்துள்ள நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5520.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 உயர்ந்து ரூபாய் 44160.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5990.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 47920.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூபாய் 78.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்