பொதுவாக, மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும்போது பங்குச் சந்தை உயரும் என்பதும், அதனால் முதலீட்டாளர்கள் லாபம் அடைவார்கள் என்பதும் தான் கடந்த கால வரலாறாக இருந்தது. ஆனால், நேற்று முன்தினம் மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது பங்குச் சந்தை குறைந்தது என்பதும், இன்றும் பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கி இருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று 682 புள்ளிகள் குறைந்து 76828 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை நிப்டி 230 புள்ளிகள் குறைந்து 23,245 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் டைட்டன், மாருதி, பாரதி ஏர்டெல், சன் பார்மா, விப்ரோ, அப்போலோ ஹாஸ்பிடல் ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் ஆக்சிஸ் வங்கி, கோடக் வங்கி, ஏஷியன் பெயிண்ட், ஐடிசி, சிப்லா, இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, டி.சி.எஸ், ஸ்டேட் வங்கி, பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் சரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.