திடீரென 300 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

புதன், 4 ஜனவரி 2023 (10:02 IST)
மும்பை பங்கு சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக புத்தாண்டுக்கு பின்னர் இரண்டு நாட்களாக பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்தது என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில் இன்று திடீரென 300 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை பங்கு சந்தை சற்று முன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 385 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 910 என வர்த்தகமாகி வருகிறது. மீண்டும் சென்சாக்ஸ் 61 ஆயிரத்துக்கு கீழே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 113 புள்ளிகள் சரிந்து 18120 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலையில் பங்குச் சந்தை சரிந்தாலும் மதியத்திற்கு மேல் பங்குச் சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்