தொடர்ந்து சரிந்து வரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 65000க்கும் குறைந்தது..!

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (10:47 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிந்து வருகிறது என்பதும் 66 ஆயிரத்துக்கும் மேலிருந்த தற்போது 65,000 கீழே வந்துவிட்டது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று மீண்டும் பங்கு சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சுமார் 350 புள்ளிகள் சார்ந்து 64,805 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 17 புள்ளிகள் சரிந்து 19,257 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. தொடர்ச்சியாக பங்கு சந்தை சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு அச்சம் ஏற்படுத்தினாலும்  பணம் இருப்பவர்கள் புதிய பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பாக இந்த சரிவு பார்க்கப்படுகிறது.
 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்