தொடர்ந்து 3 நாட்களாக சரியும் பங்குச்சந்தை.. அடுத்த வாரமாவது உயருமா?
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (10:40 IST)
பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக சரிந்து வரும் நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் 250 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து 65,428 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி 75 புள்ளிகள் சரிந்து 19,467 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
தொடர்ந்து மூன்று நாட்கள் பங்குச்சந்தை சரிந்ததால் முதலீட்டாளர்கள் அச்சத்தில் இருப்பதால் தங்களது முதலீட்டை வெளியே எடுத்து வருவதாகவும் அதனால் தான் தொடர்ச்சியாக சரிந்து கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் அடுத்த வாரம் பங்கு சந்தை மீண்டும் உயரும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ளது.