வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

திங்கள், 25 செப்டம்பர் 2023 (10:03 IST)
கடந்த வாரம் பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்த நிலையில் இந்த வாரம் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பங்குச்சந்தை வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 66 ஆயிரத்து 45 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பதும் இன்று ஒரே நாளில் 35 புள்ளிகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி ஐந்து புள்ளிகள் உயர்ந்து 19,678 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. வாரத்தின் முதல் நாள் பங்கு சந்தை உயர்ந்தாலும் மிகச்சிறிய அளவு தான் உயர்ந்துள்ளது என்பதால் மதியத்திற்கு மேல் திடீரென சரியவும் வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்