வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

திங்கள், 15 மே 2023 (09:52 IST)
கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் வாரத்தின் மூன்று நாட்கள் பங்குச்சந்தை ஏற்றத்திலும் இரண்டு நாட்கள் சரிவிலும் இருந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில் இன்று வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்து 62200 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 50 புள்ளிகள் உயர்ந்து 18,366 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை உயர்ந்துள்ளதால் இந்த வாரம் முழுவதும் பாசிட்டிவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்றும் சரியான முதலீட்டு ஆலோசகர்களுடன் கலந்து ஆலோசித்து அதன் பின் வர்த்தகம் செய்யவும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்