600 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 60 ஆயிரத்திற்கும் குறைந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

வெள்ளி, 27 ஜனவரி 2023 (09:57 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று வாரத்தின் கடைசி நாளில் சுமார் 600 புள்ளிகள் வரை சரிந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
மும்பை பங்குச்சந்தை நேற்று விடுமுறை என்பதை அடுத்து இன்று காலை 9 மணிக்கு வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 570  புள்ளிகள் வரை சரிந்து 59640  என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 155 புள்ளிகள் சரிந்து 17,735 என வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் நீண்ட இடைவேளைக்கு பின்னர் 60,000 கீழ் குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்னும் ஒரு சில நாட்கள் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்று பங்கு சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்