7 வாரத்தில் 7 முதலீடு: அம்பானியின் அதீத வளர்ச்சி!

திங்கள், 8 ஜூன் 2020 (14:00 IST)
ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைதொடர்பு சேவை நிறுவனமான ஜியோ இந்தியா முழுவதும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாகும்.  
  
இந்த நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை அதாவது, ஜியோவின் 9.99% பங்குகளை 5.7 பில்லியன் டாலர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதாவது இந்திய மதிப்பின்படி 43,574 கோடி ரூபாய்க்கு இந்த பங்குகள் வாங்கப்பட்டன.   
 
இதனைத்தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக் எனும் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது. ஆம் இந்நிறுவனம் ஒரு சதவிகித பங்குகளை ரூ 5,655.75 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.    
 
இதனைத்தொடர்ந்து தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது 2.3% பங்குகளை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமாக விஸ்டாவுக்கு விற்பனை செய்துள்ளது. இதன் மதிப்பு ₹11,367 கோடி. இதன் மூலம், ஜியோ நிறுவனம், ₹60596.37 கோடி முதலீடுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   
 
அந்த வகையில், தற்போது அபுதாபியின் பிரபல நிறுவனமான முபாதலா, ஜியோவின் 1.85% பங்குகளை ரூ.9003 கோடிக்கு வாங்கிகிறது. இதன் மூலம் ஜியோவின் 18.97 சதவிகித பங்குகளை ஆறு பெரிய நிறுவனங்கள் வாங்கியுள்ளன.  
 
இதில், அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக் நிறுவனம் மீண்டும் ஜியோவின் பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது. இம்முறை ரூ 4,546 கோடியை அந்நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம், ஜியோ நிறுவனத்தில் சில்வர் லேக் நிறுவனம் ரூ, 10,202.55 கோடி மதிப்பிலான 2.08% பங்குகளை வைத்திருக்கும். 
 
இதனால் மொத்தம் ₹ 97885.65 கோடி ரூபாய் முதலீடு 7 வாரங்களில் திரட்டப்பட்டுள்ளது. எனவே உலக அளவில் தொடர்ச்சியாக அதிக அளவிலான முதலீட்டைப் பெறும் நிறுவனமாக ஜியோ திகழ்கிறது.
 
சர்வதேச அளவிலான ஊரடங்கு நிலைக்கு மத்தியில் இத்தனை முதலீடுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்க நிகழ்வு ஆக கருதப்படுகிறது. இது இந்தியாவின் டிஜிட்டல் திறன் மற்றும் ஜியோவின் தொழில் யுக்தி கிடைத்த வெற்றி என்று ரிலையன்ஸ் நிறுவனம் இது குறித்து பெருமிதம் கொண்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்