ரூ.30,520 ஜெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை!!

வெள்ளி, 3 ஜனவரி 2020 (15:43 IST)
இதுவரை இல்லாத உச்சத்திற்கு உயர்ந்து தங்கத்தின் விலை மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 
 
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்றமும் இறக்கமுமாய் ஆட்டம் காட்டி வருகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையாலும், பலர் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்ய தொடங்கியதாலும் தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது.  
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ரூ.30,000-த்திற்குள் இருந்த நிலையில் தற்போது ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ஒரே நாளில் ரூ. 632 உயர்ந்து ரூ.30,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.   
 
காலையில், ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.456 விலை உயர்ந்து ரூ.30,344க்கு விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் விலை உயர்வு மக்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்