ஒரே வாரத்தில் 3000 ரூபாய் உயர்ந்த தங்கம்.. இன்று மட்டும் எவ்வளவு? சென்னை நிலவரம்..!

Siva

வியாழன், 22 மே 2025 (10:04 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில், கடந்த 15ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் சென்னையில் ரூ.68,880 என்ற விலையில் விற்பனையானது.
 
அந்நிலையில், இன்று அது ரூ.71,800 என விற்பனையாகி வருகிறது. கிட்டத்தட்ட ரூ.3,000 விலை ஒரே வாரத்தில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு 45 ரூபாயும், ஒரு சவரனுக்கு 360 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,930
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,975
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 71,440
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 71,800
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,741
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,790
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 77,928
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  78,320
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.112.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.112,000.00
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்