மும்பை: வெள்ளி விலை குறைவு

செவ்வாய், 28 ஜூலை 2009 (17:00 IST)
மும்பை தங்கம்,வெள்ளி சந்தையில், இன்று வெள்ளி, தங்கத்தின் விலை குறைந்தது.
கடந்த இரண்டு நாட்களாக கடுமையாக அதிகரித்து வந்த விலை, இன்று சிறிது குறைந்தது.
பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.5 குறைந்தது. தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.15 குறைந்தது.

ஆனால் லண்டன், ஆசிய நாட்டு சந்தைகளில் சிறிது அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 14.09/14.10 டாலராக அதிகரித்தது. இதே போல் 24 காரட் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 957.00/957.25 டாலராக அதிகரித்தது.

இன்று காலை விலை நிலவரம

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.15,075
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.15,005
பார் வெள்ளி கிலோ ரூ.23,120.

வெப்துனியாவைப் படிக்கவும்