சென்செக்ஸ் 570 புள்ளி சரிவு!

வியாழன், 3 ஜூலை 2008 (17:17 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் சரிந்தன. கடைசி வரை நேற்றைய இறுதி நிலைக்கு கூட வரவில்லை. இறுதியில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.

உலோக உற்பத்தி, வஙகி, ரியல் எஸ்டேட் பிரிவு பங்குகள் அதிக அளவு பாதிக்கப்பட்டன.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 570.51 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 13,094.11 ஆக சரிந்தது.

ஆசிய பங்குச் சந்தைகளில் காலையில் சீனா, ஜப்பான், ஹாங்காங் பங்குச் சந்தைகளில் காலையில் குறியீட்டு அதிகரித்து இருந்தன. ஆனால் மாலையில் சீனா, தைவான் தவிர மற்றவைகளில் குறைந்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் பாதகமான போக்கு நிலவியது. மாலை 5 மணி நிலவரப்படி பிரிட்டனில் எப்.டி.எஸ்.இ.-100 11.30 புள்ளி குறைந்தது.

அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 167.60 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 3,925.75 ஆக குறைந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 750 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,876 பங்குகளின் விலை குறைந்தது, 59 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 149.54 சுமால் கேப் 157.63, பி.எஸ்.இ. 100-315.93, பி.எஸ்.இ. 200-71.19, பி.எஸ்.இ. 500- 216.61 புள்ளிகள் குறைந்ததன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 293.95, சி.என்.எக்ஸ். ஐ.டி 113.05 பாங்க் நிஃப்டி 174.40, சி.என்.எக்ஸ்.100- 161.65, சி.என்.எக்ஸ். டிப்டி 134.95 சி.என்.எக்ஸ்.500-126.30, சி.என்.எக்ஸ். மிட் கேப் 146.90, மிட் கேப் 50- 64.25 புள்ளிகள் குறைந்ததன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று உலோக உற்பத்தி பிரிவு 1,125.47, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 272.82, வாகன உற்பத்தி பிரிவு 120.29 நுகர்வோர் பொருட்கள் பிரிவு 310.86 பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 124.87 மின் உற்பத்தி பிரிவு 106.58 வங்கி பிரிவு 271.84 ரியல் எஸ்டேட் பிரிவு 435.97 தகவல் தொழில் நுட்ப பிரிவு 139.13 புள்ளிகள் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 5 பங்கு விலை அதிகரித்தது, 45 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி ஜீனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 7 பங்குகளின் விலை அதிகரித்தது, 43 பங்குகளின் விலை குறைந்தது.

சி.என்.எக்ஸ். ஐ.டி பிரிவில் உள்ள 20 பங்குகளில் 5 பங்குகளின் விலை அதிகரித்தது, 15 பங்குகளின் விலை குறைந்தது.

பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 5 பங்குகளின் விலை அதிகரித்தது, 7 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 3 பங்குகளின் விலை அதிகரித்தது, 47 பங்குகளின் விலை குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்