சென்செக்ஸ் 244 புள்ளிகள் சரிந்து நிறைவு!

திங்கள், 18 ஜூன் 2012 (17:36 IST)
மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதக் குறைப்பில் ஏமாற்றம் அளித்ததால் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு முதலில் ஏற்றத்துடன் துவங்கி பிறகு சரிந்து இறுதியில் 244 புள்ளிகள் சரிந்து 17,000 புள்ளிகளுக்குக் கீழ் சரிந்தது.

முடிவில் சென்செக்ஸ் 16,705.83 புள்ளிகளாக இருந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 75 புள்ளிகள் சரிந்து 5,064.25 புள்ளிகளாக இருந்தது.

வட்டி விகிதக் குறைப்பு இல்லாததால் எஸ்.பி.ஐ. பங்குகள் இன்று மட்டும் 4.36% விலை சரிந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பங்கு 3.34% சரிவு கண்டது.

ரியல் எஸ்டேட், எஃப்.எம்.சி.ஜி. மற்றும் மூலதனப் பொருட்கள் பங்குகள் 1 முதல் 5% வரை சரிவு கண்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்