எச்சரிக்கையாக இருங்கள்
வியாழன், 7 அக்டோபர் 2010 (16:31 IST)
நண்பர்களோ அல்லது காதலர்களாகவோ இருந்துவிட்டு பிரிய நேர்ந்தால் பிரிவு மட்டும் துயரத்தை அளிப்பதில்லை. சில நேரஙகளில் நண்பர்களோ அல்லது காதலரோ கூட துயரத்தை அளிக்கலாம்.
அதாவது, பழகும் போது ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் காட்டி பெற்றோரிடமோ அல்லது கணவரிடமோ காண்பித்து விடுவேன் என்று மிரட்டுவது.
காதல் கடிதங்கள் அல்லது வாழ்த்து அட்டைகளை வைத்துக் கொண்டு மிரட்டுவது போன்றவற்றில் ஈடுபடலாம்.
மேலும் சிலர் உள்ளனர், கொடூர மனம் படைத்த ஆண்கள், தனது தோழியின் புகைப்படத்தை இணையதளத்தில் போட்டு விலை மாதராக சித்தரிப்பது போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.
செல்பேசி எண்ணையும் அளித்து அவர்களுக்கு பிரச்சினையை உண்டுபண்ணி விடுகிறார்கள். இதனால் அந்த பெண் மட்டுமல்ல குடும்பமே கவலை கொள்கிறது.
சிலர் முன் வந்து இது குறித்து புகார் அளித்தால் தவறு செய்தவர்களை தண்டிக்க வாய்ப்பும் ஏற்படுகிறது. ஆனால் இதுபோன்றவர்கள் நமது பெயர் வெளியே வந்துவிடுமே என்று எண்ணி புகார் அளிக்க முன்வருவதில்லை.
எனவே, ஆணோ, பெண்ணோ, நண்பராக இருந்தாலும் சரி, காதலராக இருந்தாலும் சரி எச்சரிக்கையாக இருங்கள்.