படம்: சூரிய வம்சம் பாடல்: நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது குரல்: மனோ, சுனந்தா வரிகள்: மு. மேத்தா
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம் விளையாடலாம் நிலாவிலே நிழல் மூழ்குமோ தண்ணீரிலே வானைப் புரட்டிப் போடு புது வாழ்வின் கீதம் பாடு
(நட்சத்திர)
சித்திரங்களைப் பாடச்சொல்லலாம் தென்றலை அஞ்சல் ஒன்று போடச்சொல்லலாம் புத்தகங்களில் முத்தெடுக்கலாம் பொன்னாடை இமயத்துக்குப் போத்திவிடலாம் பூமிக்குப் பொட்டு வைத்துப் பார்க்கலாம் பார்க்கலாம் பூவுக்கும் ஆடை தைத்துப் போடலாமா? சூரியத் தேரை மண்ணில் ஒட்டலாம் ஒட்டலாம் சொர்க்கத்தின் புகைப்படத்தைக் காட்டலாமா? வானம்பாடி வாழ்விலே வருந்தி அழுவதில்லை வணங்கி விழுவதில்லை
(நட்சத்திர)
சங்கீதப்புறா நெஞ்சில் பறக்கும் சந்தோஷ முல்லை இங்கே வீட்டில் முளைக்கும் சந்தன மழை நம்மை நனைக்கும் பூந்தென்றல் பாதை சொல்ல வந்து அழைக்கும் சிட்டுக்குச் சிறகடிக்கச் சொல்லித்தன்தராடி யாரடி? மீனுக்கு நீச்சல் கற்றுத் தந்ததாரோ? மேகத்தில் வீடு கட்டி வாழலாம் வாழலாம் மின்னலில் கூரை பின்னிப் போடலாமா? அங்கும் உன்தன் கைகளால் வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு