அதற்கு டார்ஜிலிங்கில் தடை விதிக்கப்பட்டுள்ளது வியப்பை அளிக்கிறது. காதலர்கள் சரி, நண்பர்கள் சரி, தம்பதியாக இருப்பவர்கள் கூட ஒருவரை ஒருவர் கைப் பிடித்துச் செல்ல முடியாது என்றால் வியப்பை மேலும் இரட்டிப்பாக்குகிறது.
இதற்கு சாட்சியாக, சமீபத்தில் தேனிலவுக்கு வந்த புதுமண தம்பதி கை கோர்த்து சென்றபோது, அவர்களை தடுத்து நிறுத்தி, இப்படி அநாகரீகமாக நடந்து கொள்ளக் கூடாது என கூர்க்காலாந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார். அவர்கள் மன்னிப்பு கேட்ட பிறகே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அந்த அடிப்படையில்தான் இத்தகைய கட்டுப்பாட்டை கொண்டு வர உள்ளோம். இதை மீறாமல் இருக்கும் வகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவோம் என கூர்க்காலாந்து அமைப்பின் இளைஞர் பிரிவு தலைவர் தெரிவித்தார்.
இத்தகைய செயலால், உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாது சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்படுவார்கள். சுற்றுலா வரும் இடங்களில் இதுபோன்ற கட்டுப்பாடுகள், சுற்றுலாப் பயணிகளை எரிச்சலடையவேச் செய்யும். இதனால் பயணிகள் வருகை பாதிக்கப்படுவதுடன் இப்பகுதிக்கும் ஒரு கெட்ட பெயர் ஏற்படும் அவ்வூரில் வசிப்பவர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த அமைப்பின் இதுபோன்ற செயல்களுக்கு எதிராக வந்துள்ள புகார் குறித்து தீவிர விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என டார்ஜிலிங் காவல் துறை உயர் அதிகாரி அகிலேஷ் தெரிவித்தார்.
இதுபோன்ற அமைப்புகள் ஏதாவது உருப்படியான காரியங்களில் ஈடுபடலாம். அதை விடுத்து, சுற்றுலா இடங்களில் பயணிகளின் அடிப்படை உரிமைகளை அடக்குவதைப் போன்ற காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.