நாடாளுமன்ற தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் திடீரென பிரதமர் மோடி தனது பெயரை டிவிட்டரில் சவுகிதார் (காவலாளி) நரேந்தர மோடி என மாற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து பாஜகவின் முன்னணித் தலைவர்கள் பலரும் தங்கள் பெயருக்கு முன்னால் சவ்கிதார் என்பதை சேர்த்து பரப்பி வருகின்றனர். பலர் இதை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தி தொலைக்காட்சியில் நடந்த விவாதம் நிகழ்வில் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். மக்களிடம் கலந்துரையாடுவது போல அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மக்கள் பாஜக தலைவர்களிடம் பேசிருக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்து எழுந்த இளைஞர் ஒருவர், பிரதமர் மோடி எங்களை பக்கோடா விற்க சொல்கிறார்.