பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஓபிஎஸ் அணியினர், மக்களவைத் தேர்தலில் மூன்று தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தி இருந்தனர். ஆனால் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்படும் என்றும் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு முழு ஆதரவளிப்பதாக தெரிவித்தார். பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் தான் போட்டியிடப் போவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தொண்டர்களின் பலத்தை நிரூபிக்கவே ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதாகவும், எங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க விரும்பியதாகவும், இரட்டை இலை சின்னம் இல்லாததால் ஒரு தொகுதியில் போட்டியிடுவதாகவும் ஓபிஎஸ் விளக்கம் அளித்தார்.
இரட்டை இலை சின்னத்தை பெறவே தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்த அவர், பாஜக கூட்டணியில் தனக்கு உரிய அங்கீகாரமும், அன்பும் உள்ளது என்றார். மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மோடி பிரதமர் ஆவார் என்றும் கூறினார்.