சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர், மொத்த வாக்காளர்களில் 3.70 கோடி பேர் பெண் வாக்காளர்கள், ஆண் வாக்காளர்கள் 3.06 கோடி பேர் உள்ளதாகவும், கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்தார். மொத்தம் 10,90547 புதிய இளைய வாக்காளர்கள் உள்ளனர் என்றும் கூறினார்
தமிழ்நாட்டில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 69.70 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 33.1 கொடியை பணமாக பறிமுதல் செய்துள்ளதாகவும் சத்யபிரத சாகு தெரிவித்தார்.