வரும் மக்களவை தேர்தலில் முதல்முறையாக திமுக கூட்டணியின் நட்சத்திர பேச்சாளராக நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி களமிறங்கியுள்ளார். முதல்வர், துணை முதல்வர், மோடி என அனனவரையும் காரசாரமாக அவர் தேர்தல் பிரச்சாரத்தில் விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் விருதுநகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி பேசுகையில், முதல்வரை டயர் நக்கி என்றெல்லாம் கூறிய அவர் தற்போது அவர்களுடனே கூட்டணி வைத்துள்ளார். நான் உண்மையை தானே பேசினேன். ஏன் அன்புமணிக்கு கோபம் வருகிறது. அன்புமணியிடம் விவாதம் செய்ய நான் தயார், அவர் தயாரா என உதயநிதி பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.