இந்தப் பணிகள் இப்போது முடிந்துள்ள நிலையில் ஜனவரி 31 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழக மொத்த வாக்காளர்கள் 5.91 கோடி பேர். இதில் ஆண்கள் 2.92 (2,9256,960) கோடி பேர். பெண்கள் 2.98 (2,98,60,765) கோடி பேர். மூன்றாம் பாலினத்தவர் 5472 பேர் ஆகும்.
வாக்காளர்கள் தத்தம் பெயரைச் சேர்ப்பதற்கு படிவம் 6, பெயரை நீக்குவதற்கு படிவம் 7, திருத்தங்களுக்குப் படிவம் 8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 ஏ ஆகியவற்றைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் ஆகியவற்றுக்காக மாநிலம் முழுவதும் 7 லட்சத்து 31 ஆயிரத்து 333 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்தலுக்கு முன் பட்டியலில் இடம்பெறும் என முன்னதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.
இப்போது 2 ஆம் கட்டமாக இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நாளை வெளியிட உள்ளது. இதில் புதிய வாக்காளர் படங்கள் அதில் இடம்பெறும். அவர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் வேறு ஏதேனும் அரசு அடையாள அட்டைகளைக் கொண்டு வாக்களிக்கலாம்.