18 தொகுதிகளுடன் திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் தேர்தலா?

திங்கள், 18 மார்ச் 2019 (11:33 IST)
நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி தமிழகத்தில் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இதுகுறித்து திமுக, உச்சநீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது
 
இந்த நிலையில்  திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அறித்துள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டால் திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் நடத்த எந்தவித தடையும் இருக்காது என்பதால் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி 18 தொகுதிகளுடன் இந்த தொகுதிக்கும் தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 
மேலும்  தேர்தல் வழக்கை காரணம் காட்டி, இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்காதது தவறு என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் நீதிமன்ற வழக்கை கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் 3 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதியை அறிவிக்காதது தவறு என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்