எடப்பாடியார் மீது செருப்பு வீசியவர் கைது

செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (12:55 IST)
தேர்தல் களம் பிரச்சாரங்களால் சூடு பிடித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு அதிமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 
 
சமீபத்தில் அவர் தஞ்சாவூர் தொகுதி தமாக வேட்பாளர் என்.ஆர்.நடராஜனுக்கு ஆதரவாக ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் திறந்தவெளி வேனில் முதல்வர் பிரச்சாரம் செய்த போது அவர் மீது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் செருப்பை வீசினார். 
 
ஆனால், அது அவர் மேல் படாமல் அருகில் இருந்த நின்றிருந்த வைத்திலிங்கத்தின் கையில்பட்டு, வேன் மேல் விழுந்தது. இநெடஹ் சம்பவம் சிறிது நேரத்திற்கு பரபரப்பை ஏற்படுத்தியது. செருப்பு வீசிய நபரை சுற்றி இருந்த அதிமுகவினர் பிடித்து கொடுத்தனர். 
முதல்வரின் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய மண்டல ஐஜி வரதராஜு தஞ்சை டிஐஜி லோகநாதன் எஸ்பி மகேஸ்வரன் ஆகியோர் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 
 
விசாரணையில், அந்த நபர் உப்புண்டார்பட்டி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பதும் இவர் அதிமுக கரை வேட்டி கட்டிக்கொண்டுதான் கூட்டத்திற்கு வந்திருக்கிறார் எனவும், இவரது குடும்பத்தார் அனைவரும் அதிமுக உறுப்பினராக இருந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. 
 
மேலும், வேல்முருகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் அதற்கான சிகிச்சை ஆவணங்கள் உள்ளதாகவும் வேல்முருகனின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், வேல்முருகனை போலீஸார் 15 நாட்கள் ரிமாண்ட் செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்