நாவலா‌சி‌ரிய‌ர் ‌நீல ப‌த்மனாபனு‌க்கு சா‌கி‌த்ய அகாதெ‌மி ‌விருது!

Webdunia

வியாழன், 27 டிசம்பர் 2007 (12:11 IST)
தமிழின் தலைசிறந்த நாவலாசிரியர்களில் ஒருவரான நீல பத்மநாபன் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது‌க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்.

"இலையுதிர் காலம்' என்ற நாவலுக்காக இந்த விருது தரப்படுகிறது. இது முதியோர் பிரச்னை பற்றிய நாவல். "தலைமுறைகள்', "பள்ளிகொண்டபுரம்' என்ற அவருடைய நாவல்களும் ரசிகர்களால் மிகவும் விரும்பிபபடிக்கப்படுபவை.

இந்த ஆண்டு 23 படைப்பாளிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மொழியிலும் நல்ல தேர்ச்சி உள்ள 3 பேர் கொண்ட நடுவர் குழுவால் பரிசுக்குரிய நூல்கள் தேர்வு செய்யப்பட்டன. அவ்விதம் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலுக்கு சாகித்ய அகாதெமி தலைவர் பேராசிரியர் கோபிசந்த் நரங் தலைமையிலான நிர்வாகக் குழு தில்லியில் புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

நாவல்கள்: விருதுபெறும் நாவலாசிரியர்கள்- புரபி பர்முதோல்(அசாமி), அமர்காந்த்(ஹிந்தி), குமாரி வீரபத்ரப்பா(கன்னடம்), தேவிதாஸ் கடம்கொங்கணி), ஏ.சேதுமாதவன்(மலையாளம்), பி.எம்.மைஸ்னாம்பா(மணிப்புரி), நீல பத்மநாபன்(தமிழ்).

கவிதைகள்: சமரேந்திர சென்குப்தா (வங்காளி), கியான்சந்த் பகோச் (டோக்ரி), ராஜேந்திர சுக்லா (குஜராத்தி), தீபக் மிஸ்ரா (ஒரியா), ஜஸ்வந்த் தீத் (பஞ்சாபி), ஹரிதத் சர்மா (சம்ஸ்கிருதம்).

சிறுகதைகள்: ஜனில் குமார் பிரம்மா (போடோ), ரத்தன்லால் சாந்த் (காஷ்மீரி), பிரதீப் பிகாரி (மைதிலி).

நாடகங்கள்: லட்சுமண் ஸ்ரீமால் (நேபாளி), கேர்வால் சரண் (சந்தாலி), வாசுதேவ் நிர்மல் (சிந்தி).

விமர்சன நூல்க‌ள்: குந்தன் மல் (ராஜஸ் தானி), வஹாப் அஷ்ரஃபி (உருது)

சரிதை: ஜி.எம். பவார் (மராட்டி)

சுயசரிதை: கடியாரம் ராமகிருஷ்ண சர்மா (தெலுங்கு)

விருதுட‌ன் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், செப்புபபட்டயம் ஆகியவையு‌ம் வழங்கப்படும். விருது வழங்கும் நிகழ்ச்சி புது டெ‌ல்‌லியில் பிப்ரவரி 2-ஆம் தேதி நடைபெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்