தாமஸ் டிரான்ஸ்ட்ரோமருக்கு இலக்கிய நோபல் பரிசு

வெள்ளி, 7 அக்டோபர் 2011 (15:15 IST)
FILE
2011ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு ஸ்வீடன் இசைக்கவிஞரான தாமஸ் டிரான்ஸ்ட்ரோமருக்கு வழங்கப்பட்டுள்ளது.

80 வயதாகும் டிரான்ஸ்டிரோமரின் இசைக்கவிதைகளில் உலக எதார்த்தை அணுகும் புதிய செறிவான படிமங்கள் இருப்பதாக அறுதியிட்ட நோபல் பரிசுக் குழுவினர் அவருக்கு இந்த ஆண்டிற்கான இலக்கிய நோபலை அறிவித்தது.

1974ஆம் ஆண்டுக்குப் பிறகு ஸ்வீடன் எழுத்தாளர் ஒருவர் நோபல் பரிசை இப்போதுதான் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரான்ஸ்ட்ரோமரின் புகழ் பெற்ற வேலைப்பாடுகளில் "விண்டோஸ் அன்ட் ஸ்டொண்ஸ்" மிகவும் முக்கியமானது என்று இலக்கிய விஅம்ர்சகர்கள் கருதுகின்றனர்.

இவரை பல நாடுகளில் அறிய முடியவிட்டாலும், 50 மொழிகளில் இவரது எழுத்துக்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. வட அமெரிக்காவில் இவரது எழுத்துக்களுக்கு வரவேற்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்