ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்திட சட்டம் – கேரளா ,தமிழகத்தைப் போன்று பிற மாநிலங்கள் முன்னெடுக்குமா?

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (23:32 IST)
ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்திட சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பல்வேறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த விளையாட்டிற்கு பல முன்னணி நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு நட்சத்திரங்கள் எனப் பலரும் அம்பாசிட்டராகவும் விளம்பர மாடலாகவும் உள்ளனர்.

இதனால், மக்கள் பலரும் இந்த ஆன்லைன் சூதாட்ட கவர்ச்சி விளம்பரத்தால் அதில் விளையாடி,  ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இதனால் அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், மக்கள் பலரின்  வாழ்க்கையை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்திட சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த ஜுன் மாதம் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களைத் தவிர்க்கும்படி ஊடகங்களுக்கு  மத்திய அரசு அறிவுறுத்தியது.

ஆனால், இது பெயரளவுக்குத்தான் உள்ளதது. இந்த விளம்பரங்களில் நடிக்கும்  நடிகர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தங்கள் துறையில் திறமையாக உள்ளவர்களின்  பேச்சுகளும், வசனங்களும் பார்வையாளர்களின் மனதைக் கவர்வது ஒருபுறம் இருந்தாலும் தனக்கு, அந்த விளையாட்டின் மூலம்  என்ன கிடைக்கப் போகிறது? என்ன குறைந்தபட்ச புரிதல்கூட இல்லாமல் அதை எதற்கு விளையாட வேண்டும்?

தமிழகத்தில்  கடந்த 15 மாதங்களில் மட்டும் 22 மரணங்கள் இந்த ஆன்லைன் சூதாட்டத்தினால் ஏற்பட்ட  நிதி நெருக்கடியால் 28 இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியான ஒட்டுமொத்த மா நிலத்தையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து,  உளவியல் நிபுணர்கள், சமூக வல்லுனர்கள்,எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் அரசிற்கு ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து இதன் விபரீதத்தைப் பற்றிக் கூறினர். இதையடுத்து, அரசு ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக புதிய அவசரச் சட்டம்  இயற்றுவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளது தமிழக அரசு. இந்தக் குழு அறிக்கை பற்றி அரசு பரிசீலனையில் வைத்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது பற்றி மக்களிடமும் கருத்துகளைக் கேட்டுள்ளது தமிழக அரசு.

இதற்போது கேரள முதல்வரும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்திட சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அங்கு நிலவும் சூதாட்டினால் ஏற்படும் தற்கொலைகளுக்கு முடிவு எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைன் விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொண்டால் பரவாயில்லை; அதன் மூலம் பல லட்சங்களும், ஆயிரங்களும் ஈட்டலாம் என்பதுபோல் அதை விளையாடுகின்ற பார்வையாளர்களுக்கு ஆசையும், ஆர்வமூட்டுகிற சமூகவலைதள விளம்பரங்கள் மத்திய அரசு அறிவுறுத்தியபோது அந்தச் சூதாட்ட விளம்பரங்களைத் தடுப்பதாகத் தெரியவில்லை.

நாளுக்கு நாள் இதன் நோக்கம் வாடிக்கையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்பதற்கேக ஒவ்வொரு விளம்பரமும் ஒளிபரப்பாகி வருகிறது. நானும் ஃபேஸ்புக்கில் இந்த ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்திற்கு ‘ஹிட்(hide) என்று கொடுத்தால் அது திரும்ப திரும்ப என் கண்முன் ஸ்கீரினில் பூதம்போல் வருகிறது.

 இதுபோல்தானே எல்லோருக்கும் வரும்?

படிக்கும் மாணவர்களுக்கும் இப்படித்தானே வரும்? தங்கள் மனதை அதிலிருந்து திசை திருப்ப முயன்றாலும்கூட, அதிலிருந்து விடுபடக்கூடாது என்பதற்கேற்பவே  நம் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் இந்த விளம்பரங்கள் வந்து  நம் ஆசையை வெறுமனே தூண்டாமால், பணக்காரன் ஆகலாம் என்ற நப்பாசையைத் தூண்டச் செய்கிறது.

இதன் முடிவுதான் சமீப கால ஆன்லைன் சூதாட்ட நிதி நெருக்கடியால் ஏற்பட்ட மரணங்கள்.

நன்கு படித்தால், உயர்ந்த பதவிகளில் அமர்ந்து,  நல்ல சம்பளம் பெற்று சமூதாயத்தில்  நல்ல மதிப்பில் இருக்கலாம் என்ற நீதினெறி போதனைபோன்ற அறிவுரைகளை எல்லாம் கேட்பதுபோல் தெரியவில்லை.

எல்லாம் அவசரம்!

இளந்தலைமுறையின் வாழ்க்கையில் மலிந்துள்ள இணையததளங்களில் வருகையினால் விரைவில் கோடீஸ்வரனாக வேண்டும் என்ற நப்பாசையிலும் இந்த ஆன்லைன் சூதாட்ட கவர்ச்சசி விளம்பரங்களினால் கண்ணைக்கட்டிக்கொண்டு  இதில் விழுகின்றனர்.

கடைசியில் இதற்கு அடிமையாகி இருப்பதையும் இழந்து, எப்படியும் தோற்றுவிடுவோம் என்ற முன்னெச்சரிக்கை உணர்வுக்கு ஆட்படாமல் தன் மூலதனங்களை இழப்பதுடன் நிற்காமல், வீட்டில் இருந்து திருடியும், அடகு வைத்தும் போதாமல், அக்கம் பக்கத்தில் கடன்வாங்கி, மொத்தத்தையும்  ஆடியில் சுவடிகளை ஆற்றில் விடுவதுபோல் இந்த சூதாட்ட வெள்ளத்தில் எல்லாவற்றையும் இழந்து, கடன் நெருக்கடிக்கு ஆளாகி தன் வாழ்க்கை முடிக்கும் நிலைக்கு வருகின்றனர்.


ஐபிஎல் தொடர் வருகிற போததெல்லாம் ஒரு குறிப்பிட்ட எஃப்.எம்மில் மக்கள்  ஆர்.ஜேவுக்கு அழைத்து, அவர்கள் அடுத்த பாலி சிக்ஸரா? போரா? என்று கேட்டு சரியாகச் சொல்லிவிட்டால் அதற்குப் பணம் பரிசு என்றும், தவறாகச் சொல்லிவிட்டால் எதுவுமில்லை என்று கூறும் விளையாட்டு கூட எனக்கு நெருடலாக இருந்ததுண்டு. இதில், வாடிக்கையாளர்கள் பணம் கட்டுவதில்லை என்பதால் அவர்களுக்குப் பாதிப்பில்லை. அதேபோல் ஒரு சில தொலைக்காட்சிகளில் ஒரு நடிகர், நடிகையின் புகைப்படத்தை மங்களாக்கி, அவர் பெயரைச் சரியாய்க் கூறுபவர்களுக்கு பரிசு எனக் கூறுவர். இதுவும் வாடிக்கையாளர்களின் நேரத்தைக் கொள்ளையடிக்கிறதே தவிர பெரியளவில் பாதிப்பில்லை.

ஆனால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு முழுத் தடை விதிக்க வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்கள் எல்லோரது கோரிக்கையாக உள்ளது. இப்போது தமிழகம், கேரளாவில் இதற்கான முன்னெடுப்பு தொடங்கியுள்ளதால் விரையில்  நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்கமைத்திட சட்டம் இயற்ற வேண்டும் என்பதும் கூடுதல் எதிர்பார்ப்பாகவுள்ளது.
 
 #சினோஜ்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்