அறிந்தும் அறியாமலும் ! சிறப்புக் கட்டுரை !!

சனி, 2 ஜனவரி 2021 (18:10 IST)
அறிந்தும் அறியாமலும் நாம் உலகிடமிருந்து கற்றுவருகிற அனுபவப்படிப்பினைகள் பலவும் நம்மைஅடுத்தநாளில் எப்படி இவ்வுகத்தாரிடம் நடக்கவேண்டுன் என்பது பற்றிய பாடத்தைக் கற்றுத்தருகிறது.

நாம் நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் இந்த உலகத்தைக் கூர்ந்து கற்றுவருகிறவர்களாகிறோம். இந்த உலக அனுபவத்துடன் நமது புத்தக வாசிப்பும் கூடினால் நம் சிந்தைக்கு தெளிவும் நம் எண்ணும் எண்ணங்களுக்கு நிச்சயம் ஒரு உயிர்ப்பான எழுத்தாற்றல் பரிசாகக் கிடைக்கும். அது நம்முடன் சேர்ந்து நம் நலம்விரும்பிகளுக்கும்  மற்றவர்களுக்கும் ஒரு புதியவற்றைத் தரக்கூடியவையாக மலரும்.
என்றும் நினைவில் நிற்கவேண்டிய கருத்துகள் மொத்தத்தையும் நமக்கு முன்னோடிகள் காகிதம் இல்லாக் காலத்திலேயே மண் ஓடுகளிலும், கல்வெட்டுக்களிலும், பனைஓலைகளிலும் எழுதி வைத்து நாம் நடக்கவேண்டிய நாகரிப்பண்பாட்டிற்குப் பாதை அமைத்துக் கொடுத்துள்ளனர். நாம் அதை நமது நவயுகப் பரிமாணத்திற்கேற்ப தகவமைத்து இத்தொழிலுட்பத்தின் உதவியால அதை மேலும் விசாலமாக்கிக்கொண்டோம்.

ஆர்யப்பட்டார் தொடங்கி பிதாகரஸ், சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற முன்னோர்களின் வழியே கடந்த ஆயிரம் நூற்றாண்டில் மிகச்சிறந்த சிந்தனைவாதியாக பிபிசியால் தேர்வு செய்யப்பட்ட அறிஞர்களைவிட மக்களால் விரும்பித்தேர்வு செய்யப்பட்ட காரல் மார்க்ஸ் மகத்தான இடத்தைப் பிடித்தார். அவருக்கு அடுத்த இடத்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிடிதார். அடுத்ததாக ஒவ்வொரு வினைக்குஎதிர்வினையுண்டு என்று கூறி நிரூபித்த ஐசக்நியூட்டர் பிடித்தார்.  ஆக ஒவ்வொன்றிலிருந்து அதன் தொடர்ச்சி அடுத்தடுத்த பரிணாமங்களாக வளர்து மனிதனின் அறிவு வெளிச்சத்தை அறியாமையிருளிருந்து நகர்த்துகிறது.

காரல் மார்க்ஸ் மற்றும் அவரது நண்பர் பிரெடிரிக் எங்கெல்ஸ் ஆகியோரிட அறிவார்ந்த கம்யூசிய  சிந்தாந்தத்திலிருந்து ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மார்க்ஸ்சிய சிந்தாந்ததை பாமர மக்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைத்தார். அவரைப்போல் சீனாவின் மாவோவும் காரல் மார்ஸ்கின் சிந்தாந்தத்திற்குச் புதிய செயல்வடிவம் கொடுத்தார்.

இப்படியாக ஒன்றினைப் பற்றிய புரிதலுக்கும் அதன் கருத்தோட்டத்திற்கும் இந்த அனுபவமும் புத்தகம் வாசித்தலும் என்றென்றும் இன்றியனையாதவையாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்