செ‌ம்மொ‌ழி மாநாடு அர‌சிய‌‌ல் மாநாடாகவே நட‌ந்தது - கோவை ஞா‌னி

வெள்ளி, 12 நவம்பர் 2010 (18:34 IST)
கோவை ஞா‌னி நே‌ர்காண‌ல் தொட‌ர்‌ச்‌சி...

பொறியியல் கல்லூரிகளில் மட்டுமல்ல, மருத்துவக் கல்லூரியிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழைப் புகுத்தியிருக்க முடியும். இடையில் என்ன காரணம் சொல்லிவிட்டார்கள் என்றால், டெல்லியில் இருக்கக் கூடிய இதற்கான அனுமதி வழங்கக்கூடிய துறை (இந்திய மருத்துவக் கவுன்சில்) அனுமதி வழங்கவில்லை என்று சொன்னார்கள். உண்மையில் அவர்கள் கேட்டது என்னவென்றால், பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழைப் புகுத்துவதற்கு முன்பாக அதற்கான முறையில் தமிழை நீங்கள் தகுதிப்படுத்தியிருக்கின்றீர்களா? நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றவா? கலைச்சொற்கள் தயாராக இருக்கின்றனவா? ஆசிரியர்களுக்கு பயிற்சி தந்திருக்கின்றீர்களா? இதை செய்திருக்கின்றீர்கள் என்று சொன்னால், கண்டிப்பாக மருத்துவம், பொறியியல் துறைகளில் தமிழைப் புகுத்தலாம் என்றுதான் அவர்கள் கேட்டார்கள்.

ஆனால், இவர்கள் தந்த பதில் என்னவென்றால், இல்லை என்பது. இல்லை என்பது உண்மையே கிடையாது. 10 ஆண்டுகளாகவே இதற்கான பேராசிரியர்கள், கலைச்சொற்கள் தொகுப்பு, இதற்கான நூல்கள் முதலியவைகள் எல்லாம் தொடக்க நிலையில் தயாராகத்தான் இருந்தன. அந்த சமயத்தில் இல்லை என்று சொல்லி தமிழ் மக்களுக்கு இந்தச் செய்தியை இவர்கள் மறைத்துவிட்டு, நமக்குத் தகுதியில்லை என்கிறார்கள். ஆனால், சொல்லக்கூடிய ஒரே காரணம் என்னவென்று சொன்னால், ஆங்கில ஆதரவு ஒன்றுதான். இதில் அதிர்ச்சி தரக்கூடிய ஒரு செய்தி என்னவென்றால், கலைஞரே ஒரு சமயத்தில் ஒரு தத்துவம் போல ஒன்றைச் சொன்னார், 'வசதிக்கு ஆங்கிலம், வாழ்வுக்குத் தமிழ்' இந்த உரை எவ்வளவு தனமான உரை என்று நினைத்துப் பாருங்கள், வசதிக்கு ஆங்கிலம் வாழ்வுக்குத் தமிழ் என்று சொன்னால், இதற்கு என்ன அர்த்தங்கள் என்று நாம் மேலும் விளக்க வேண்டியதில்லை.

சரி, இதெல்லாம் தவிர உலகத் தமிழ் மாநாடு என்பதை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று அறிவித்து கலைஞரை இந்த மாநாட்டைக் கூட்டினார். பல தமிழறிஞர்கள் சிவதம்பி முதலியவர்களுடைய ஆதரவோடு மாநாட்டை நடத்தினார்கள். நான் பெரிதாக எதிர்பார்த்தது என்னவென்று சொன்னால், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்கின்ற இந்த வடிவத்தில் செம்மொழி பற்றிய ஆய்வுதான் பெரிய அளவில் நடக்கும் என்று நினைத்தேன். இல்லவே இல்லை.

ஏற்கனவே நடந்த உலகத் தமிழ் மாநாடுகள் சென்னையில் நடந்தது, மதுரையில் நடந்தது எப்படியோ - அரசியல் மாநாடு போல எப்படி நடந்தனவோ - அதேபோலதான் இந்த மாநாட்டை நடத்தினார்களேயொழிய, மற்றபடி தமிழைச் செம்மொழி என்று மைய அரசு ஏற்றுக்கொண்ட பிறகு, செம்மொழிதான் தமிழ் என்பதை மெய்ப்பிக்கக்கூடிய முறையில் மிகப்பெரிய ஆய்வுகளை இந்த மாநாடு தொடங்கிவைக்கும், அதற்கானத் தூண்டுதலை இந்த மாநாடு தரும் என்று நான் பெரிதாக எதிர்பார்த்தான். அநேகமாக ஒன்றுமே இல்லை.

பர்கோடாவைப் பொறுத்தவரையில் அவருக்கு விருது வழங்கினார்கள். அவர் சிறப்புரை நிகழ்த்தினார். ஜார்ஜ் கார்ட் போன்றவர்களும் மாநாட்டிற்கு வந்திருந்தார்கள். சிந்து சமவெளி பற்றி ஒரு மிகச்சிறந்த ஆய்வை அவர் முன்வைத்தாராம். அந்த ஆய்வை உண்மையில் எத்தனை தமிழிஞர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதைப்பற்றி எனக்கு ஐயம் உண்டு. பர்கோடாவைப் பற்றி சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கில் கூட, எங்களுக்கெல்லாம் தெரிவிக்காமல் எப்படி முருக வழிபாடு நடந்ததெல்லாம் என்று கூட கேள்விகள் எழுந்ததாக நான் கேள்விப்பட்டேன். அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்லக்கூடியது, நமக்கு ஏற்கனவே கடந்த 50, 60 ஆண்டுகளுக்கு இடையில் சொல்லப்பட்டது என்னவென்று சொன்னால், 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது. கடைசியாக வந்த ஒரு செய்தி, சிந்து சமவெளியில் பாகிஸ்தான் பகுதியில் சில பகுதிகள் உண்டு. அங்கு செய்யப்பட்ட ஆய்வில் பாகிஸ்தான் அறிஞர்கள் சொல்லக்கூடியது என்னவென்றால், கி.மு. 8,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்கிறார்கள். சாத்தூர் சேரன்ன் போன்றவர்கள் 30,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது, அதற்கான ஆதாரங்களெல்லாம் கிடைத்துள்ளது என்று சொல்கிறார்கள்.

சிந்து சமவெளியில் ஆய்வு செய்யப்பட்ட இடங்கள் மிகச் சிலதான். இன்னும் மிகப்பெரும்பாலான இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த ஆய்விற்கான ஏதாவது ஒரு திட்டம் - இந்த ஆய்வை மைய அரசின் ஒத்துழைப்புடன்தான் செய்ய முடியும் - இதை தமிழக அரசு வற்புறுத்துகிறதா என்று சொன்னால், பெரிய அளவில் வற்புறுத்தவில்லை. இதுபோன்ற ஆய்வுகளில் தமிழியல் அறிஞர்களை அரசு ஈடுபடுத்துகிறதா என்று சொன்னால், அப்படியும் இல்லை. தனி நபர்கள் சில பேர் மதிவாணன் போன்றவர்கள் சிந்து சமவெளி பற்றி ஆய்வு செய்திருக்கிறார்கள். அந்தக் கருத்தை அரசு ஏற்றுக்கொண்டதாகவும் தெரியவில்லை.

அரசைப் பொறுத்தவரை பர்கோடாவின் ஆய்வு மட்டுமல்ல, இன்னும் இரண்டொரு அறிஞர்களின் ஆய்வைத் தவிர வேறு யாருடைய ஆய்வையும் முன்வைக்கவில்லை. கடைசியாக பூம்புகாரில் கடலியல் ஆய்வு என்று சொல்லி ஒன்று நடந்தது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக. அந்த அறிஞர் சொன் ஆய்வு என்னவென்றால், இன்றையிலிருந்து 13,500 ஆண்டுகளுக்கு முன்பு என்று சொன்னார். கி.மு. 9,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது பூம்புகார் நகர சின்னங்களில் இருந்து அறியக்கூடியது என்று சொன்னார். வேறு சில ஆய்வுகளெல்லாம் ஆதிச்சநல்லூர் முதலியவை பற்றியெல்லாம் சொல்லும் போது, அந்த நாகரிகம் இன்னும் தொண்மையானது என்று அவர்கள் சொல்கிறார்கள்.

குமரிக் கண்டம் ஆய்வு என்பது இன்னும் மிக முக்கியமான ஒரு ஆய்வு. இதற்கெல்லாம் ஏதோ இரண்டொரு வார்த்தைகள் பூம்புகார், குமரி கண்டம் பற்றிய ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்று மாநாட்டில் அறிவிக்கப்பட்டனவே அன்றி, வேறு எந்த அறிவிப்புகளோ, முயற்சிகளோ செய்யப்படவில்லை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற வடிவத்தில் நடந்த இந்த ஆய்வு மாநாடு இதற்கான திட்டங்களோ, வரையறைகளோ வகுக்கப்படாதது என்பது ஒரு மிகப்பெரிய ஏமாற்றம்.

இதுபோக, செம்மொழி மாநாடு என்று கலைஞர் அறிவித்த உடனே, சிவத்தம்பி அவர்கள் சில திட்டங்களை முன்வைத்தார்கள். உண்மையில் தமிழை செம்மொழி என்று மெய்ப்பிக்க வேண்டும் என்று சொன்னால், தமிழுக்கும் சமஸ்கிருத்தத்திற்கும் உள்ள தொடர்பு, தமிழுக்கும் வட இந்திய மொழிகளுக்கும் உள்ள தொடர்பு. முக்கியமாக தமிழுக்கும் செம்மேரியன் மொழிக்கும் உள்ள தொடர்பு. தென் கிழக்கு ஆசியாவில் தமிழ்ச் சொற்கள், சின்னங்கள் ஏராளமாக இருக்கிறது. இதனோடு தமிழுக்கு இருக்கக்கூடிய தொடர்பு, தமிழகத்திற்கு இருக்கக் கூடிய தொடர்பு என்று சொல்லி, 4 வரையறைகளை சிவத்தம்பி முன்வைத்தார்.

இந்த 4 வரையறைகளை நடைமுறைப்படுத்தும் வகையில் செம்மொழி மாநாடு அமைந்திருந்தாலும் கூட வரவேற்கலாம். அதுவும் இல்லை. அப்பொழுது, இந்த வகையில் பார்த்தீர்களென்றால், ஏதோ செம்மொழி மாநாடு என்று பெரிதாக அறிவிக்கப்பட்டதேயொழிய அதற்கான திட்டங்கள் மாநாட்டில் விவாதிக்கப்படவில்லை. அதுவொரு வகையில் ஏமாற்றம். ஆனால், அதன்பிறகு இப்பொழுது சில காரியங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் சிலவற்றை வரவேற்கலாம். மோசமில்லை. அந்த அளவிற்கு நிறுத்திக்கொள்ளலாம்.

அடிப்படையில், என்னுடைய அந்த சிறிய நூலில் சொல்லப்பட்ட செய்தி - செம்மொழி மாநாட்டில் என்ன எதிர்பார்க்கலாம் - என்பது. உண்மையில், தமிழனுடைய விடுதலைக்கான திட்டங்கள் இந்த மாநாட்டில் வகுக்கப்பட வேண்டும். தமிழியல் ஆய்வு என்று சொல்லக்கூடியது தமிழ் மக்களுடைய விடுதலைக்கான ஆய்வாகத்தான் இருக்க வேண்டும். தமிழ் ஆய்வு என்று சொன்னாலும், தமிழ் மக்களைப் பற்றி ஆய்வு, தமிழ் வரலாறு, தமிழ் இலக்கிய ஆய்வு என்று எந்த வடிவத்தில் துவக்கினாலும் கூட அதன் முதல் நோக்கம் மட்டுமல்ல, இறுதி நோக்கம் மட்டுமல்ல, இரண்டு நோக்கங்களும் தமிழனுடைய விடுதலை, தமிழினுடைய விடுதலை என்றிருக்க வேண்டும்.

உண்மையில் தமிழை செம்மொழி என்று மைய அரசு ஏற்றுக்கொண்டது, அது 1000, 1500, 2000 எப்படியோ இருக்கட்டும். அந்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெறும். அதுவும் ஒருபக்கம் இருக்கட்டும். உண்மையில் தமிழைச் செம்மொழி என்று அறிவிக்கும் போது, எங்களைப் போன்றவர்கள் தமிழ் உணர்வாளர்கள் பெரிதாக எதிர்பார்த்தது என்று சொன்னால், இந்திய வரலாற்றில் பல்லாயிரணமான இந்திய வரலாற்றில் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் அதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இடையில் தமிழ் என்பது இந்தியா முழுவதும் வழங்கிய ஒரு மொழியாக இருந்தது என்பதைப் பார்க்கிறோம்.

அதற்கான ஆதாரங்கள் என்று சொன்னால் மத்திய இந்தியாவில், வடமேற்கு இந்தியாவில், பிறகு இந்தியாவைக் கடந்து வெளிப்பகுதிகளில் தமிழ் மொழியினுடைய சொற்கள் ஏராளமாக இன்று வரை நமக்குக் கிடைக்கின்றன. அப்ப, இந்தியா முழுவதும் ஒரு காலத்தில் தமிழினுடைய செல்வாக்கு பெரிய அளவில் இருந்தது. சொல்லப்போனால், ஆரிய‌இந்தியாவிற்கு வருவதற்கு முன்னால் தமிழ்தான் இந்தியா முழுவதும் இருந்த மொழி என்று நம்முடைய அறிஞர்கள் சொல்கிறார்கள்.

அடிப்படையில் நான் சொல்வது என்னவென்று சொன்னால் இன்று வரை மைய அரசோ...

தொடரு‌ம்...

வெப்துனியாவைப் படிக்கவும்