'தலைவர் 168' படத்திலிருந்து ரஜினிகாந்த் விலகுகிறாரா? அதிர்ச்சித் தகவல்

சனி, 15 பிப்ரவரி 2020 (19:59 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் 'தலைவர் 168'. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இந்நேரம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு கால தாமதம் ஆகி வருவது படக்குழுவினர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தர்பார் படத்தின் தோல்வியால் ரஜினியின் சம்பளம் பாதியாகக் குறைக்க சன் பிக்சர்ஸ் ஒரு முடிவெடுத்து இருப்பதாகவும் இதற்கு ரஜினியும் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது
 
ஆனால் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியின்படி ரஜினி இந்த படத்தில் இருந்து விலக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் ’தலைவர் 168’ படத்தின் படம் ஏறக்குறைய 2021 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ரிலீசாக வாய்ப்பு இருப்பதால் இந்த படத்தை அரசியல் காரணங்களுக்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடக்கி வைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அப்படியே ரிலீஸ் செய்தாலும் வேண்டும் என்றே இந்த படத்தை தோல்வியடையச் செய்து தன்னுடைய இமேஜை குறைக்க வாய்ப்பு இருப்பதாகவும் ரஜினிக்கு சந்தேகம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது
 
ஏனெனில் ரஜினி குறித்து சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறனின் சகோதரர் தயாநிதி மாறன் பாராளுமன்றத்தில் பேசியதும் ரஜினிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏற்கனவே விஜய்யின் காவலன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கி விட்டு நீண்ட நீண்ட நாட்களாக ரிலீஸ் செய்யாமல் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அரசியல் ரீதியாக பழிவாங்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 168 படத்தை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ரஜினி இந்த படத்தை தொடரலாமா? வேண்டாமா என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது 
 
இருப்பினும் இந்த தகவல் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்றும் இவை அனைத்தும் ஒரு சில கோடம்பாக்கம்காரர்களால் பரப்பப்படும் வதந்தி என்றும் ’தலைவர் 168’ திரைப்படம் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடரும் என்றும் சிறுத்தைசிவா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்