கலக்கத்தில் தளபதி ரசிகர்கள்

புதன், 23 ஆகஸ்ட் 2017 (19:18 IST)
இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கம் இயக்குநர் பேசிய ஏடாகூட பேச்சல், தளபதி ரசிகர்கள் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.
 


 

கடந்த சனிக்கிழமை, தளபதி நடித்துள்ள படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடந்தது. அதில், பல பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர். எப்போதுமே வித்தியாசமாகப் பேசுகிறேன் என்று சொல்லி ஏடாகூடமாக எதையாவது பேசும் இயக்குநர் கம் நடிகர், வழக்கம்போல பேசினார்.

தளபதியின் முந்தைய படமான காட்டு விலங்கின் பெயர் கொண்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இப்படித்தான் ஒரு இயக்குநர் கம் நடிகர் கம் இசையமைப்பாளர் தளபதியை ஓவராகப் புகழ்ந்தார். அந்தப் படம் ஊத்திக் கொண்டது. இந்தப் படமும் அதுபோல் ஆகிவிடக் கூடாது என கலக்கத்தில் இருக்கிறார்களாம் தளபதி ரசிகர்கள்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்