ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்த நடிகை

வியாழன், 14 ஜூன் 2018 (10:24 IST)
ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை மயங்கி விழுந்ததால், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
காட்டின் பெயரைத் தலைப்பாகக் கொண்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் இந்த மும்பை நடிகை. இவருடைய தாத்தா, பாலிவுட்டில் பெரிய நடிகர். அதுமட்டுமல்ல, இவருடைய பாட்டி, அப்பா, அம்மா எல்லாருமே பாலிவுட் நடிகர்கள்தான். நடனத்தை முறைப்படி கற்றுத் தேர்ந்துள்ள இந்த நடிகை, தன்னுடைய முதல் தமிழ்ப் படத்திலேயே இடுப்பை வளைத்து, நெளித்து ஆட்டி ரசிகர்களைக் கவர்ந்துவிட்டார்.
 
இந்நிலையில், எளிமையான நடிகர் என்று பெயரெடுத்த, தளபதியின் பெயரை முன்பாதியாகக் கொண்ட நடிகரின் படத்தில் தற்போது நடித்துள்ளார் நடிகை. மைனஸ் 9 டிகிரியில் இருவரும் ஆடும் காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள். நடிகர் முதற்கொண்டு எல்லாரும் ஸ்வெட்டர் போட்டுக்கொள்ள, நடிகைக்கு மட்டும் தம்மாத்தூண்டு துணியைக் கொடுத்து ஆடவைத்துள்ளனர்.
 
ஒருகட்டத்தில் குளிரைத் தாங்க முடியாமல் மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார் நடிகை. அவருடைய உதடுகள் நிறம் மாறத் தொடங்க, பயந்துபோன படக்குழு அவசரம் அவசரமாக காரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆயத்தமாகி இருக்கின்றனர். ஆனால், மீதமுள்ள காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டு அப்புறமாக மருத்துவமனைக்கு போய்க் கொள்ளலாம் என்று சொன்ன நடிகை, ஹீட்டரில் சிறிது ஓய்வெடுத்துவிட்டு நடித்துக் கொடுத்தாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்