பார்த்தால் பக்கத்து வீட்டுப்பெண், படுத்தியெடுப்பதில் நம்பர் ஒன்

புதன், 16 செப்டம்பர் 2015 (13:48 IST)
இப்படித்தான் தல பட யூனிட்டில் அலுத்துக் கொள்கிறார்கள். சினிமா நாயகிக்கு உரிய பளபளப்பு இல்லை என்றாலும் மேனன் நடிகையை தொடர்ந்து நடிக்க வைக்க காரணம், தேவையில்லாத குடைச்சல் தரமாட்டார் என்பதற்காகத்தான். தனக்கென பெயரும் புகழும் வரும்வரை அடக்கி வாசித்தவர் இப்போது சுயரூபத்தை திறந்து காட்ட ஆரம்பித்துள்ளார்.
 

தலயின் புதிய படத்தில் தங்கையாக நடிக்கிறார் மேனன். பலமுறை இவரது கால்ஷீட் சொதப்பலால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. பேட்ச்வொர்க்கிற்கு இவர் விடுமுறை தினத்தில் கால்ஷீட் தந்ததால் தயாரிப்பாளருக்கு இரட்டிப்பு செலவு.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.
 

வெப்துனியாவைப் படிக்கவும்