காதல் வலையில் உச்ச நட்சத்திரத்தின் மகள்

வியாழன், 27 ஏப்ரல் 2017 (14:47 IST)
உச்ச நட்சத்திரம் மலேசிய டானாக நடித்த படத்தில், அவருடைய மகளாக நடித்தவர் இந்த தஞ்சாவூர் நடிகை. அதே படத்தில் வாத்தியாராக நடித்தவர், பெயரிலேயே ஆர்ட்டைக் கொண்டிருக்கும் அந்த நடிகர். அந்தப் படத்தில் ஒன்றாக நடித்தபோது இருவருக்கும் இடையில் காதல் பூத்ததாம்.

 
அதனால், அந்த நடிகர் நடிக்கும் படத்தில் நடிகையையும், நடிகைக்கு வரும் வாய்ப்பில் நடிகரையும் ஒப்பந்தம் செய்யச்  சொல்கிறார்களாம். இப்படி இருவருமே இரண்டு படத்தில் ஒன்றாக நடித்துவிட்டார்களாம். சூர்யா – ஜோதிகா போல  சினிமாவிலும், வாழ்க்கையிலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே இருவரின் எண்ணமாம். இத்தனைக்கும் அந்த நடிகருக்கு  திருமணம் ஆகிவிட்டது என்பது குறிப்பிடதக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்