இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்துள்ள புதிய படம் விரைவில் வெளியாக இருக்கிறது. பொதுவாக அந்த நடிகர், தான் நடித்த பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. இந்த பட புரோமஷன் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாரிப்பாளர் அழைக்க, முடியாது என மறுத்து விட்டாராம்.
சரி.. இவர்தான் வரவில்லை, நடிகையாவது அழைப்போம் என தொடர்பு கொண்டால், அங்காடி நடிகை போனையே எடுக்கவில்லையாம். மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டு மனம் வெறுத்துபோனாராம் தயாரிப்பாளர். புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என நடிகர்தான் கூறியிருப்பார் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.