வர வர காதல் கசக்குதய்யா...

வியாழன், 28 மார்ச் 2013 (13:27 IST)
காதல் கொண்ட இயக்குனரின் குடும்ப வாழ்க்கையை குழாயடி சண்டையாக்கினார் என்றொரு அவப்பெயர் அந்தப் பச்சைக்கிளி முத்துச்சரத்துக்கு உண்டு.

அடுத்தப்படியாக சின்னப்பையனுடன் லிப்லாக். அந்த அபஸ்வரம் கேட்டு தெளியும் முன், காதலுக்கு மரியாதை தந்தவரின் மகன் கிளியை காதலிப்பதாக நூல்விட்டார். இரண்டு காதல்கள் புட்டுக் கொண்டதால் நடிகைக்கு காதல் கசக்க ஆரம்பித்ததோ என்னவோ.

வத்திக்குச்சி அஞ்சலி மாதிரி, இங்க பாருப்பா... யார் வேணா என்னை காதலிக்கலாம். ஆனா நான் காதலிக்கிறேனான்னு கேட்டா இல்லைன்னு சொல்வேன் என்று புதிரான ஒரு பதிலளித்திருக்கிறார்.

பேச்சில் கசப்பு கிலோ மீட்டர் தாண்டியும் மணக்குதே.

வெப்துனியாவைப் படிக்கவும்